India

தெலுங்கு தேசம் அலோசனை… தேசிய அரசியல் பரப்பரப்பு… சந்திரபாபு நாயுடுவின் எதிர்காலம் என்ன?

மத்திய பட்ஜெடில் ஆந்திர மாநிலத்திற்கு போதிய நிதி மற்றும் திட்டங்களை அறிவிக்கவில்லை என்பதை முன் வைத்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கின்றது.

இந்த அலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டுமா? என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அலோசனை நடத்த இருக்கின்றார்கள்.

2004ல் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் மறைந்த காங்கிரஸ் தலைவர் YSR ராஜசேகர ரெட்டியில் ஆட்சியே பறிகொடுத்து 10 ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டு இருந்து தெலுங்கு தேசம் கட்சி 2014 பாஜக உடன் கூட்டணி வைத்து மோடி அலையில் வெற்றி பெற்று பிரிக்கப்பட்ட ஆந்திர மாதிலத்தின் முதல்வரானது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சி NDA கூட்டணியை விட்டு விலகினால் உடனே ஆந்திர எதிர்கட்சியான YSR காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தயாராக உள்ளது.

அதனால் இன்று சந்திரபாபு நாயுடு எடுக்க போகும் முடிவு தான் அவருடைய அரசியல் வாழ்வை தீர்மானிக்க போகும் முடிவாகும்.

இதனால் தேசிய அரசியலில் மிகவும் பராப்பரப்பு ஏற்பட்டு உள்ளது.

Show More

Related Articles

Close