Social

மாற்றங்கள் ஒன்றே மாறாதது! இயற்கைக்கு ஒத்துழைப்பு செய்து மாற்றங்களை தேடுங்கள்!

மாற்றங்கள் பருவநிலை, மனிதநிலை,பூமிநிலை என்று ஒவ்வொரு தளங்களில் இருந்தும் மாறிக்கொண்டே இருக்கும்! பருவநிலை மாற்றத்தால் மழை,வெயில்,காற்று மண்டலம் இவைகள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அதனால்தான் உலகிலேயே அதிகம் மழை பெய்யும் சிரபுஞ்சி பெயர் பெற்றதாக விளங்கிற்று இதில் மாறுபாடு வருமா? என்ற கேள்வி எழலாம்! நிச்சயமாக காலம் அதற்கு பதில் சொல்லும்! மிகவும் வறண்ட தார் பாலைவனத்தில் என்றாவது மாற்றம் வந்து மழை தருமா நிச்சயமாக மாற்றம் வரும்!சிங்கப்பூரில் அதிகபட்சமாக மழை இரண்டு வாரங்கள் பெய்யவில்லை என்றால் எல்லோரும் அது குறித்து பேசுவார்கள்! எப்போதும் குளிர்ந்த சூழல் சார்ந்த அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய நாடுகள் 20 டிகிரிக்கும் மேலாக போனாலே சூடான காலமாகவே உணர்வார்கள்! இந்த காலநிலை மாற்றம்தான் பூமியின் நிலையை தீர்மானிக்கிறது! மழை இல்லாத மண்வளம் என்பது கடினமான ஒன்று! பூமியின் மேற்பரப்பில் வறண்டும், உள்ளே ஈரப்பதம் இருக்குமானால் அந்த நிலைகளில் பதிப்புகள் இருக்க வாய்ப்பு இல்லை! ஆனால் மண் இறுக்கம் ஏற்பட ஈரப்பதம் இல்லாத காரணமும் ஒன்று! மாற்றம்

இயற்கையின் மூலம் இவ்வாறெல்லாம் ஏற்படுத்துகிறது என்றால் மனிதர்களிடத்தில் ஏற்படக் கூடிய மாற்றம் தனி சக்தியாக உள்ளது! ஒரு தனி மனிதன் தன்னை எப்படி உருவாக்கி கொள்கிறான் என்பது அவனை பொறுத்தே அமையும்! அதைத்தான் பண்டைய ஞானிகளும்,அறிவியலாளர்களும் பதிவு செய்து போய் உள்ளனர்! அப்படிப்பட்டவர்கள் உலகம் முழுமையாக இருந்து உள்ளனர்! என்றாலும் பாரதத்தில் தோன்றிய பெரும் ஞானிகள் பஞ்சபூத தத்துவத்தை முன்னிறுத்தி எண்ணிப்பார்க்க இயலாத அரும்பெரும் காரியங்களை தவம் என்னும் வலிமையால் பெற்று உலகத்திற்கு பறைசாற்றி இருக்கிறார்கள்! அந்த மனவலிமை தவ யோகம் இன்று உலகம் பெற்ற மாற்றங்களை, பெறப்போகும் மாற்றங்களை சொல்லி சென்று இருக்கிறது! ஒரு செயலை மன அமைதியோடு தடைகள் இல்லாமல் கடைப்பிடித்து வந்தால் அது ஏற்படுத்தும் மாற்றம் கொஞ்ச நாட்களில் அந்த தனிமனிதனே உணர முடியும்! இன்றைய இந்தியாவின் நிலையில் ஏற்படுத்திய தாக்கம் உலகின் பலநாடுகளை சில விசயங்களில் உற்று நோக்கச் செய்து இருக்கிறது என்றால் காரணம் மாற்றம்.

அரேபிய நாடுகள் பல விசயங்களில் எல்லைக்கு மீறிய கட்டுப்பாட்டோடு கட்டமைக்கப்பட்டவை ஆனால் சமீபத்தில் அரேபிய வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு (சவூதி,யுனைடெட் அரபு எமிரேட்ஸ், பகரைன்,ஓமான்,குவைத், கத்தார்) தற்போது விரிசல் ஏற்பட்டு உள்ளது! காரணம் மாற்றம்,

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒரு குழந்தையை ஆசையாக தூக்கி உனக்குப் பிடித்த பெயர் என்று கேட்டபோது அந்த அமெரிக்க குழந்தை இந்திய பிரதமர் பெயரை சொல்கிறது என்றால் காரணம் மாற்றம்

இந்த மாற்றத்தை நோக்கி தமிழகமும், தமிழ் மக்களும் நகர வேண்டிய தேவை இருக்கிறது! தமிழகத்தில் நீர்நிலைகள் இயலாமையால் மாறிவிட்டது, கடல்வெளிகள் சுனாமியால் மாறிவிட்டது, வயல்வெளிகள் நீரின்றி மாறிவிட்டது, இயற்கை கொடுத்த குருவிகளும்,கிளிகளும்,விலங்கினமும்,பூச்சிக்களும்,புழுக்களும் அருகி விட்டது! வயல்வெளிகளில் உப்பு சுரக்கும் உழைப்பு குறைந்து விட்டது! மதுவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட கிராமங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் பட்டியல் இடுகிறது! தமிழகத்தில் நாம் கண்டுகொண்டு இருக்கும் மாற்றங்கள் இவை!
ஆனால் உண்மையான மாற்றங்கள் எவை?
இயற்கைக்கு எதிரான இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையை மாற்றினாலே மாற்றம்தான்!
மாற்றங்கள் ஒன்றே மாறாதது! இயற்கைக்கு ஒத்துழைப்பு செய்து மாற்றங்களை தேடுங்கள்!

A.M.K.மணிவண்ணன்.

Tags
Show More
Close