Politics

8லட்சம் பேரிடர் நிதியை பயன்படுத்திய பினராய் விஜயன்……பிச்சைக்காரர்களிடமே பிச்சை எடுப்பது போல!……காங்கிரஸ் கடும் விமர்சனம்.

  • கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடிற்கு செல்ல மாநில பேரிடர் நிதியில் இருந்து சுமார் 8லட்சம் ரூபாயை ஹெலிகாப்டர் வாடகைக்காக கேரள முதல்வர் பினராய் விஜயன் பயன்படுத்தியதாக குற்றசாட்டு எழுந்து இருக்கின்றது.
  • கடந்த டிசம்பர் மாதம் ஒக்கி புயல் தமிழகம் மற்றும் கேரளத்தையும் தாக்கியது, இதை தொடர்ந்து நிவாரணம் பணிக்களுக்காக பல்வேறு தரப்பு மக்கள் மீட்பு பணிக்காக கேரள அரசிற்கு பண கொடுத்தார்கள் அவை மாநில பேரிடர் நிதியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
  • இதை தொடர்ந்து டிசம்பர் 26ல் கேரள முதல்வர் பினராய் விஜயன் திருச்சூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு செல்ல தனியார் ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். இதற்கு வாடகை பணமான 8லட்சம் ரூபாயை செலுத்த திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறக்கப்பட்து.இதை மாவட்ட ஆட்சியர் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலுத்தி இருக்கின்றார்.
  • இதைப் பற்றி கருத்து கூறிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராமேஷ் சென்னிதாலா மாநில பேரிடர் நிதியில் இருந்து பணத்தை எடுத்து சொந்த பயன்பாட்டிற்கு பயண்படுத்திய முதல்வர் விஜயனின் செயல் “பிச்சைக்காரர்களிடமே பிச்சை”எடுப்பதை போல என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார்.
  • பேரிடர் நிதியை சொந்த வேலைக்கு பயண்படுத்திய கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து இருக்கின்றது.மேலும் நெட்டிசன்கள் கம்யூனிஸ்ட் முதல்வரின் செயலை சமூக வலைதளத்தில் விவாத பொருளாக்கி உள்ளனர்.
Show More

Related Articles

Close