Tamil NaduTamil News

தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

காவிரியில் 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையில் தற்போது உள்ள 21 டி.எம்.சி தண்ணீர் போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் கர்நாடகம் வழங்க முடியும் என்றும் முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி விவசாயிகளின் தேவை கருதி கர்நாடகம் தண்ணீர் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Close