Short News

Short News 60 Second Now | 05/01/2018

தன்னுடைய வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் கோரிக்கை


பேருந்துகளை இயக்க அரசு எடுக்கும் முடிவு ஆபத்தில் முடியும் – கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் எச்சரிக்கை


இன்று மக்களவையில் கன்னி உரையாற்றுக்கின்றார் பாஜக தலைவர் அமித்ஷா


போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் வரும் இன்னல்களை மக்கள் பொருத்து கொள்ள வேண்டும் CITU தலைவர் சௌந்தரராஜன்.


இந்தியா தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 2மணிக்கு துவங்க இருக்கின்றது


சபரிமலை வரும் பெண்களுக்கு வயது சான்றிதழை கொண்டு வர சொல்ல தேவசம் போர்டு முடிவு


பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு ,ராணுவ தளவாட உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் சந்திப்பு..


பாரதீய ஜனதா என்னை அச்சுறுத்துகிறது, சாதிகள் இல்லாத இந்தியாவை விரும்புகிறோம் -ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த வன்முறை குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
எனது பேச்சில் ஒருவார்த்தை கூற வன்முறையை தூண்டும் விதமாக இல்லை.  நான் குறிவைக்கப்பட்டு உள்ளேன். என் உரையில் எந்த ஒரு பகுதியும் ஆத்திரமூட்டுவதாகவோ  அல்லது வன்முறையை தூண்டுவதாகவோ இல்லை.
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி. பாரதீய ஜனதா என்னை பயமுறுத்துகிறது. நான் சாதியற்ற இந்தியாவை  விரும்புகிறேன்.தலித்துகள் போராட்டம் நடத்த உரிமை இல்லையா? “என கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்த போராட்டத்தை தடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

முத்தலாக் மசோதா நிறைவேறாமல் மாநிலங்களவை ஒத்திவைப்பு: குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு


புத்தகத்தில் உள்ள அனைத்தும் பொய்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோபம்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்கும் முன்பாக, 2016-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க ஐடித்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், ட்ரம்பை சந்தித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, எச்1பி விசாவுக்கு எதிராக பேசிய நிலையில் அத்தகைய நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எச்1பி விசாவுக்கு எதிராக எதையும் செய்யப்பபோவதில்லை என ட்ரம்ப் அவர்களுக்கு உறுதியளித்தார்” என அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே ட்ரம்ப் பற்றிய பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது

“வெள்ளை மாளிகைக்குள் வந்து செல்ல நான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இந்தப் புத்தகத்தை எழுதியவரிடம் நான் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அவர் எழுதியுள்ள புத்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தும் பொய்களே. அதில் துளியும் உண்மையில்லை. எந்தவித ஆதாரமும் இன்றி, இட்டுகட்டி அந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது” எனக் கூறினார்.


ஜனவரி 29-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

“இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது பகுதி மார்ச் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது” எனக் கூறினார்.


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்

“போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, வேலை நிறுத்தத்தை முறிடியக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்குவது விதிமீறல். பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மொத்தம் 10 சதவீத பேருந்துகள் கூட தற்போது இயக்கப்படவில்லை. எங்களுடன் 17 தொழிற்சங்கங்கள் உள்ளன.

அரசு அறிவித்த 2.57 காரணி அடிப்படையிலான சம்பள உயர்வு விகிதத்தை ஏற்க முடியாது. அரசு எங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்தால், போக்குவரத்து தொழிலாளர்கள் மேலும் 7 ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் ஏற்படும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ எனக் கூறினார்.


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்றும்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


அண்ணா தொழிற்சங்கத்தை கொண்டு பேருந்துகளை இயக்குவது என்பது நெருப்பில் விரலை விட்டது போன்றது: மு.க.ஸ்டாலின்

போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களுடன் முதல்வர் பழனிசாமி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு காண வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதிய பிரச்சனையும் தீர்க்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் அளவில் நடந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதால் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்


அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘பாம்’ பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சுமார் ஏழு புள்ளி 8 அங்குலம் பனி மூடியுள்ளது. பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப் புயல், அண்மைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாஸ்டனில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடல் அலைகள் சீற்றம் காரணமாக அருகில் இருந்த சுரங்க ரயில் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. நியுஜெர்சியில் இருந்து வடக்கு கரோலினா வரை போடப்பட்ட தணணீர் குழாய்கள் உடைப்பெடுத்தன.


Show More

Related Articles

Close