Short News

Short News 60 Second Now | 08/01/2018

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்து 70-ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் முதல் பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) எல்லை நகரமான அமிர்தசரஸில் திறக்கப்பட்டது.


இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தந்தை தேவராஜ் சிக்கா 85-வது வயதில் காலமானார். பருவ மழையைக் கணிக்க பல்வேறு நுணுக்கங்களை உருவாக்கியவர்


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு


தனியார் பஸ் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும் பொழுது அரசு பஸ் நிறுவனத்திற்கு மட்டும் எப்படி நஷ்டம் ஏற்படும்? பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி


போலி வாக்குறுதிகளையும் பொய்யான தகவல்களையும் அடிபடையாக ஏமாற்றதை தருக்கின்றதை தவிர வேற எதுவுமில்லை ஆளுநர் உரையில் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து.


மும்பையிலுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை


தென்னாபிரிக்கா முதல் டெஸ்டில் இந்தியா அணி வெற்றிக்கு 208 நிர்ணைத்து இருக்கின்றது.


தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அஜீஸ் அன்சாரிக்கு சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான கோல்டன் குளோப் விருது


வேலை நிறுத்தம் தொடரும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு


போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு


பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கான மானியம் ரூ. 25,000 உயர்த்தப்படும்- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்


போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க தாமதம் செய்வது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி


அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்கலாமே ? ஐகோர்ட் யோசனை

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ வேலை நிறுத்தம் தொடர்பாக பிப்., மாதமே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. இப்பிரச்னை 8 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஓய்வூதிய நிலுவை தொகை, பணிக்கொடை வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில், நிலுவைதொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கண்டிப்பு

 • அரசுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். போராட்டத்தினால் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அரசு பஸ் ஊழியர்களுக்கு தெரியுமா; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதிய நிலுவை தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 • வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் இந்த வழக்கை மாற்று அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஊழியர்கள் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் வழங்க முடியாவிட்டால் போக்குவரத்து கழகத்தை கலைத்துவிட்டு தனியார் மயக்கலாமே என்றும் நீதிபதி கூறினார். அதே நேரத்தில் ஸ்டிரைக் நடத்தக்கூடாது என்ற தடை நீடிக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 208 ரன் வெற்றி இலக்கு

கேப்டவுனில் நடைபெற்று வரும் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் அணி 286 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. Markram மற்றும் Elgar ஆகியோர் சிறப்பாக ஆடினாலும் மற்ற வீரர்கள் நல்ல துவக்கத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர். நேற்றைய 3 வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 வது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் இன்று மளமளவென சரியத் தொடங்கின. டி வில்லியர்ஸ் தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கேப்டன் டியுப்ளெசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என 22 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

போராட்டம் தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என 22 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் பணிமனைகள் முன்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு


கூட்டத்தொடர் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால்

 • பேரவையில் நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கும் என்றார். வரும் 10, 11 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
 • 11ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுவார்கள் என்றும், 12ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவிப்பார் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை- TTV தினகரன்

 • ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை
 • மீத்தேன் திட்டத்தை தடை செய்வது குறித்த அறிவிப்பு இல்லை
 • கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை
 • கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்
 • ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலும் இல்லை

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்- ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள்

 •  தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்க நீரா பானம் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஆளுநர் தனது உரையில் பாராட்டுத் தெரிவித்தார். வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருவாயை ஆதரிக்க கலப்பு பண்ணைய முறையை ஊக்குவிக்கும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் வரும் பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தும் என்று கூறினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முழுக்கொள்ளளவான 152 அடி வரை உயர்த்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் கூறினார்.
 • காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கோதாவரி உபரி நீரை திருப்பி, கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-பாலாறு-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ், கல்லணைக்கு அருகில் 125 டிஎம்சி அடிநீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வகையிலான இணைப்புத் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக ஆளுநர் கூறினார். குடிமராமத்து திட்டத்தை கூடுதல் நிதிஒதுக்கீட்டுடன் மேலும் முனைப்புடன் செயல்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.
Show More

Related Articles

Close