Short News

Short News 60 Second Now | 09/01/2018

ஜிஎஸ்டி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யும் வழிமுறைகளை எளிமையாக்க முடிவு: மத்திய அரசு


சென்னையில் 3 மணி நேரத்திற்கு பிறகு பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது


தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு


கொட்டும் மழையில் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்


பயணத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 2 பேர் பணிநீக்கம்


உத்தரகண்ட்டில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை


அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் : சவுந்தரராஜன் தகவல்

 • மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன் நாளை போராட்டம் நடைபெறும் என சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோரிக்கை நிறைவேற்ற அரசு தயார் என்றால் தான் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 • முன்னதாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மீதான உலகபார்வையில் மாற்றம்: பிரதமர்

 • 23 நாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மாநாடு டில்லியில் நடந்தது. இந்தியாவில் நடக்கும் இந்த முதல் கூட்டத்தில் 125 பேர் பங்கேற்றனர்.
 • இதில் பிரதமர் மோடி பேசுகையில்; உங்களின் சாதனைகள் இந்தியர்களுக்கு பெருமை அளிப்பதாக இருக்கும். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருகிறது.
 • வெளிப்படைத்தன்மை காரணமாக, தற்போது இந்தியா மாற்றம் பெற்றுள்ளது. ஊழல்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் நடந்துள்ளது. ஜி.எஸ்.டி.,யால் பொருளாதாரத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, சீர்திருத்தமே எங்களின் கொள்கை. ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர் தேவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல் வழி வியாபாரம் , இந்தியாவின் இளைஞர்களின் நலன் ஆகியவற்றை மையமாக வைத்தே நாங்கள் முன்னேற்ற நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறோம். இதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெருக்கிட கடும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 177 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

தினகரன் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி

 • சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.
  இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தினகரன் ஆர்..கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். அவர் எம்.எல்ஏ.வாக பணியாற்ற தடைவிதித்தும், சட்டசபைக்கு நுழைய தடை விதிக்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 • வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அதனை ரத்து செய்யும் அதிகாரம் கோர்ட்டிற்கு இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஒரு வரி பேக்ஸ்: சிக்கினார் லாலு

 • பாட்னா: கால்நடை தீவன ஊழல் வழக்கில் இரண்டாவது முறையாக, 3.5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், இந்த விவகாரத்தில் சிக்கியது, ஒரு வரி பேக்ஸ் கடிதம் மூலம் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
 • பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலைமை செயலாளராக பணியாற்றியவர் விஜய் சங்கர் துபே, 74. இவர், 1966ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிய துவங்கினார்; 2002ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். நாளந்தா திறந்தநிலை பல்கலையின் துணைவேந்தராக 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார். இவர் தான், கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கியதற்கு முக்கிய காரணம்.

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி

 • “எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் விதிமுறை மாற்றத்தை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை பரிசீலிக்கவில்லை. இதற்குரிய சட்டத்திலிருக்கும் விதியை வேறு வகையில் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று உணரப்படுகிறது, இச்சட்டத்தின் அசலான விதிப்படி எச்1பி விசா நீட்டிப்பு வழங்க வேண்டும்” என்று குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து 6 ஆண்டுகளுக்கும் கூடுதலாக எச்1பி விசா நீட்டிப்பு வழங்க முடியும்.
 • இந்நிலையில் விசா நீட்டிப்பை ரத்து செய்யும் எந்த கொள்கையையும் குடியேற்றத்துறை பரிசீலிக்காது. அழுத்தம் காரணமாக குடியேற்றத்துறை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்ற செய்திகள் முற்றிலும் தவறானவை, என்று செய்தித் தொடர்பாளர் ஜானதன் விதிங்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 • இத்தகைய எச்1பி விசா கெடுபிடிகள் இந்தியா, அமெரிக்கா இரண்டுக்குமே மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாஸ்காம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

பொதுமக்கள் பாதிப்பை உணர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Show More

Related Articles

Close