Tech

வாட்ஸ் அப் குறித்து அதிர்ச்சி தகவல்! ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

ஹாக்கிங் முறைகள் மூலம் வாட்ஸ் அப் குழுமங்களில் நுழைந்து தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்-பில் இயங்கும் குரூப்களில், அட்மின்களுக்கு தெரியாமல் யாரை வேண்டுமானலும் சேர்க்க முடியும்

ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் அம்சத்தில் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி வாட்ஸ்அப் சர்வர்களை இயக்கும் வசதி கொண்டவர்கள், வாட்ஸ்அப் க்ரூப்களில் அட்மின் உத்தரவின்றி நேரடியாக மற்றவர்களை சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் க்ரூப்களில் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் அட்மின் உத்தரவின்றி சேர்க்கப்படும் புதிய நபரால் முழுமையாக படிக்க முடியும்.
இவ்வாறு அட்மின் உத்தரவின்றி, க்ரூப் சாட்டில் நுழையும் புதிய நபர், குறிப்பிட்ட க்ரூப் சாட்களை முழுமையாக படிக்க வழி செய்யும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரின் தனியுரிமையை வெகுவாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. க்ரூப்களில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய நபர் மற்றவர்களுக்கு க்ரூப் அட்மின் மூலம் சேர்க்கப்பட்டதாகவே தெரியும்.
ஆராய்ச்சி மாணவர்களின் இந்த தகவலுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு இருப்பின் அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Show More

Related Articles

Close